Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 17)

Sri Kshama Shodashi

ஸ்ரீமாந் கூராந்வவாயே கலசஜலநிதௌ கௌஸ்துபாப: அவதீர்ண: ஸ்ரீவேதவ்யாஸ பட்டாரக தநயவரோ ரங்கராஜஸ்ய ஹ்ருத்ய: வேதாசார்யா பிதாநோ விதித குணகணோ ரங்கிணஸ் ஸ்தோத்ரமேதத் சக்ரே நித்யாபி ஜப்யம் ஸகல தநுப்ருதாம் ஸர்வபாபாபநுத்த்யை

ஸ்வாமி கூரத்தாழ்வானின் வம்சம் என்ற திருப்பாற்கடலில் கௌஸ்துபமணி போன்று உள்ளவரும், வேதவ்யாஸ பட்டரின் திருக்குமாரரும், சிறந்த குணங்கள் கொண்டவரும், ஸ்ரீரங்கநாதனின் இதயத்திற்கு மிகவும் ப்ரியமானவரும், அவனது திருவுள்ளத்தை எப்போதும் மகிழும்படிச் செய்பவரும் ஆகிய வேதாசார்யர் - அனைத்து உயிர்களும் தங்களது பாபங்களை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, ஸ்ரீரங்கநாதன் விஷயமாக இந்த ச்லோகத்தை அருளிச்செய்தார்.