Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 16)
Sri Kshama Shodashi
அல்பம் சேதந வேக்ஷணீய ஸரணா வாரோப்யதாம் மத் க்ருதம் கிஞ்சித் பூரி பவேதிதம் யதி குரூந் ஸம்ப்ரேக்ஷ்ய மே த்யஜ்யதாம் யத்வா அநந்த மநந்த வைபவ ஜுஷோ ரங்க க்ஷமா வல்லப த்வத் க்ஷாந்த்யா: கலு லக்ஷ்யதாம் மநுகுணா மாநியதாம் த்வத் தயா
ஸ்ரீரங்கராஜா! க்ஷமையின் நாதனே! எனது பாபங்கள் மிகவும் சிறியவை என்று எண்ணினால், நீ உனது பெருந்தன்மை காரணமாகப் பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம். அவை சற்றே அதிகம் என்று எண்ணினால், எனது முன்னோர்கள் உனக்குச் செய்த பலவற்றுக்காக, அவர்களுக்காக நீ தள்ளலாம். அவை மிகவும் அதிகம் என்று எண்ணினால், “நமது பொறுமையைக் காண்பிக்க வாய்ப்பு கிட்டியது” என்று எண்ணி அவற்றை உனது க்ஷமைக்கு இலக்காக்கி மன்னிப்பாயாக.
எத்தனை யுகங்கள் ஆனாலும் கர்மங்கள் அனுபவிக்காமல், தன்னுடைய எண்ணற்ற பாபங்கள் மொத்தமாகத் தொலைய வேண்டும் என்று எண்ணியவராக விண்ணப்பம் செய்கிறார்.