Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 15)
Sri Kshama Shodashi
ஸ்ரீரங்கேச்வர! புண்யபாப பலயோ: ஸ்வாதீநதாம் குர்வதோ: ஸர்வேஷாம் ஸுகதுக்கயோ: ஸ்வயம் அஹம் மக்நாசயோ மமபி ஸ்மர்த்தும் ந ப்ரபவாமி கிம் புநரஹம் த்வாம் அந்தரந்த: ஸ்திதம் தத் தே த்வம் க்ஷமயா நிரஸ்ய குரு மே த்வத் த்யாந யோக்யம் தசாம்
ஸ்ரீரங்கநாதா! அவரவர்களின் புண்ணியபாவ பலன்கள் காரணமாக சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் வசப்பட்டபடி உள்ளோம். அந்தந்த பலன்களையே எண்ணியபடி உள்ளதால், என்னுடைய ஆத்மாவின் ஸ்வரூபத்தையே என்னால் எண்ணியபடி இருக்க இயலவில்லை. இப்படி உள்ளபோது, எனது இதயத்தில் உள்ள தஹரா என்னும் ஆகாசத்தில் உள்ள குகையில் பதிந்து கிடக்கும் உன்னை எப்படி நான் எண்ணுவேன்? ஆகவே உனது க்ஷமை குணம் மூலம் எனது பந்தங்களை விலக்கி, நான் உன்னை த்யானித்தபடி உள்ள நிலையை நீயே ஏற்படுத்த வேண்டும்.
கடந்த ச்லோகத்தில் இவர் கூறியதைக் கேட்ட திருவரங்கன், “ஒருவன் எத்தனை பாபங்களை செய்தபோதிலும் சிறிதாவது நம்மை எண்ணினால் போதுமானது. ஆகவே நம்மை எண்ணியபடி இருந்து உம்முடைய கர்மபந்தத்தை நீவிர் விலக்கிக் கொள்ளவேண்டியது தானே”, என்றான். இதற்கு விடை அளிக்கிறார்.