Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 14)

Sri Kshama Shodashi

ஸ்ரீரங்கேச வசோ மதீய மதுநா வ்யக்தம் த்வயா ச்ரூயதாம் புண்யம் தத் பல ஸங்கமாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத் பாபம் நைவ ததா பலம் விதநுதே சக்யம் ந தத் வாரணம் தத் க்ஷாந்த்யா தவ சக்யமேவ ததிதம் ஸத்யம் த்வயா கல்ப்யதாம்

பெரியபெருமாளே! அழகியமணவாளா! நான் கூறுவதை நன்றாகக் கேட்பாயாக. புண்ணியபலன்கள் மற்றும் பாவபலன்கள் ஆகியவற்றுக்கு வேறுபாடு உண்டு. ஒருவன் செய்த புண்ணியபலன்கள் என்பவை அவன் விரும்பினால் மட்டுமே அவனிடம் ஒட்டும், விரும்பாவிட்டால் வந்து சேராது. ஆகவே வைராக்யமாக இருத்தல் என்பது புண்ணியங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் பாவபலன்கள் அப்படி அல்ல. அவை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பலன் அளித்தே தீரும்; அதாவது அவை அனுபவித்தே கழிக்கவேண்டியதாகும் (எந்தவிதமான பரிகாரங்களாலும் கர்மபலன்களை அனுபவிக்காமல் கழிக்க இயலாது என்று கருத்து). ஆகவே உனது க்ஷமை மூலம் மட்டுமே பாபங்களை விலக்க இயலும். எனவே நீ அந்த க்ஷமை என்பதைச் செய்தருளவேண்டும். அவதாரிகை – கடந்த ச்லோகத்தில் இவர் கூறியதைக் கேட்டு நகைத்த அரங்கன், “பற்றில்லாத தன்மை மூலம் கர்மபந்தங்களை உண்டாக்கவல்ல பாபங்களை விலக்க இயலும். நீவிர் அப்படிச் செய்ய வேண்டியதுதானே”, என்று கூற இவர் விண்ணப்பம் செய்கிறார்.