Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 13)

Sri Kshama Shodashi

தத் தத் கர்ம பலாநுரூபமகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே தஸ்மாத் கர்ம வசம்வதத்வம் அதிகம் வக்தும் த்வாபி க்ஷமம் ஸ்ரீரங்கேச்வர! தத் ப்ரஸாந்தி விதயே க்ஷாந்த்யா நிராக்ருத்ய மே ஸர்வம் பாதக மாசு தர்சய பவத் ஸ்வதாந்த்ர்யம் அதி உஜ்ஜ்வலம்

ஸ்ரீரங்கநாதா! நாங்கள் அனைவரும் கர்மவசப்பட்டவர்கள் ஆவோம். ஆனால் நீயோ ஸ்வதந்த்ரமானவன் ஆவாய். ஆன போதிலும் நீ கர்மவசப்பட்டு நிற்கிறாய் என்றே கூற வேண்டியுள்ளது. ஏன் என்றால் தேவர்கள், மனிதர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களின் கர்மங்களுக்கு ஏற்றபடி நீ ஸ்ருஷ்டி போன்றவற்றைச் செய்கிறாய். எனவே கர்மத்திற்கு வசப்பட்டிருத்தல் உனக்கு அதிகமாகவே உள்ளது என்றாகிறது. இத்தகைய நிலையை நீ மாற்றிக் கொண்டு, ஸ்வதந்திரமானவன் என்று உன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றால், எனது பாபங்களை நீ பொறுத்துக்கொள்வாயாக. இதன் மூலம் உனது ஸ்வாதந்த்ர்யம் முழுமையாக வெளிப்பட்டுவிடும்.

கடந்த ச்லோகத்தில் இவர் கூறியதைக் கேட்ட அரங்கன், ”உம்முடைய பாபங்களுக்கு ஏற்ற தண்டனைகளை வழங்க வேண்டிய நிலையில் நாம் இப்போது உள்ளோம். எனவே நீவிர் அவற்றுக்கான தண்டனைகளைப் பெற்றே ஆகவேண்டும். இனி நான் என்ன செய்வது?”, என்று கூற, இவர் மேலும் விண்ணப்பம் செய்கிறார்.