Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 12)

Sri Kshama Shodashi

ஸோஹம் க்ஷுத்ர தயா ஜுகுப்ஸிததமம் துஷ்கர்ம நித்யம் ஸ்மரந் குர்வந் காமம் அசுத்தரீதி: அபவம் ஸ்ரீரங்க ப்ருத்வீ பதே ஏதத் தே மஹதோ விசுத்த மநஸா ஸ்மர்த்தும் ந யுக்தம் கலு க்ஷாந்த்யா விஸ்மர தத் ததோஹமஸுகாந் முக்தோ பவேயம் ஸுகீ

ஸ்ரீரங்கத்தின் அதிபதியே! அரங்கா! நான் எனது தாழ்வான ஸ்வபாவம் காரணமாக மிகவும் வெறுக்கத்தக்கதான பல பாவச் செயல்களை செய்தபடி உள்ளேன். அப்படிப்பட்ட தாழ்வான செயல்களைப் பற்றியே எப்போது எண்ணியபடி நான் உள்ளேன். ஆனால் நீயோ மிகவும் உயர்ந்த ஸ்வபாவம் கொண்டவன் ஆவாய். அப்படிப்பட்ட நீ உனது தூய்மையான மனதால் எனது பாபங்களை நோக்கத் தொடங்கினால், உனது மனம் எப்போதும் எனது பாபங்கள் என்னும் அழுக்கை எண்ணியபடியே இருக்கவேண்டியதாக இருக்கும். உயர்வான உனக்கு இது ஏற்புடையது அல்ல. ஆகவே உனது பொறுமைக் குணம் மூலம் எனது பாபங்களை மன்னித்துவிடுவாயாக. இதுவே நம் இருவருக்கும் சுகம் அளிக்கின்ற செயலாக இருக்கும்.

இதுவரை தனது பாபங்களைக் கண்டு தண்டித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ப்ரார்த்தித்தபடி நின்றார். அடுத்து தனது பாபங்களை எண்ணும் அளவிற்கு ஸ்ரீரங்கநாதன் தாழக்கூடாது என்று எண்ணி விண்ணப்பம் செய்கிறார்.