Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 10)

Sri Kshama Shodashi

தேவ த்வாம் சரணம் ப்ரபந்நமபி மாம் துக்காந் அநந்ய ஆச்ரயம் பாதந்தே யதி ஸர்வபாப நிவஹாத் த்வாம் மோக்ஷயிஷ்யாமி அஹம் இத்யுக்தம் தவ வாக்யம் அர்த்த விதுரம் ஜாயேத யத்வா பவாந் தத்ரா சக்த இதி ப்ரதேத ஹி ததோ மாம் ரக்ஷது த்வத் க்ஷமா

தேவர்களின் அதிபதியான திருவரங்கா! எந்தவிதமான புகலிடமும் இல்லாமல் நான் “மாமேகம் சரணம் வ்ரஜ:” என்று நீ கீதை இட்ட கட்டளைப்படி உன்னிடம் சரணம் புகுந்தேன். இப்படி உன்னிடம் சரணம் புகுந்த பின்னரும் என்னுடைய பாபங்கள் காரணமாக வல்வினைகள் என்னை வாட்டும் என்றால், நீ உரைத்தபடி ”அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ - உனது பாபங்களை நான் நீக்குகிறேன்” என்ற உறுதிமொழி பொய்த்ததே! இதனால் உனது சொற்கள் “பரம்பொருளின் சொற்கள் அல்ல, ஒரு வழிப்போக்கனின் சொற்கள்” என்றாகிவிடும். அல்லது பாபங்களைப் போக்கும் திறன் உன்னிடம் இல்லை என்றாகிவிடும். ஆகவே இப்படிப்பட்ட இழிந்த சொற்கள் உன்னைத் தாக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவாவது எனது பாபங்களை நீ பொறுத்துக் கொள்வாயாக.

“நான் மேலே கூறியவற்றைக் கேட்டபடி நின்ற பின்னரும் நீ என்னைப் பொறுத்துக் கொள்ளவில்லை என்றால் – ‘ஸ்ரீரங்கநாதன் தனது வாக்குறுதியைக் காப்பாற்றுபவன் அல்லன்’ என்னும் அவப்பெயர் உனக்கு வந்துவிடும்”, என்று ஸ்ரீரங்கநாதனை அன்புடன் எச்சரிக்கிறார். அதாவது கீதையின் சரம ச்லோகத்தைத் தனது கேடயமாகக் கையில் எடுக்கிறார்.