Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 9)

Sri Kshama Shodashi

மத் பாபக்ஷபணாய யோஜயஸி சேத் கோரேண தண்டேந மாம் ரங்காதீச்வர! கேவலாக கரணாத் துக்கம் மம ஸ்யாந் மஹத்! தத் த்ரஷ்டுர் பவத: அபி துக்கமதுலம் கோரம் தயாளோ! பவேத் தஸ்மாத் தே அபி ஸுகாய மத் க்ருதமிதம் ஸர்வம் த்வயா க்ஷம்யதாம்

ஸ்ரீரங்கத்தின் அதிபதியே! அனுபவித்தால் மட்டுமே கழியும் என்று கூறக் கூடியதான எல்லையற்ற பல பாபங்களை நான் செய்தவன் என்பதால், அவற்றை நீக்கும் விதமாக நீ அளிக்கும் தண்டனைகளை நான் ஏற்றே ஆகவேண்டும். இதனால் எனக்கு மிகுந்த துன்பம் உண்டாகும். இதனால் ”பரமகாருணிகன், தயாளு” என்றெல்லாம் கூறப்படும் உனக்கு நேர்வது என்ன என்று அறிவாயா? நான் படும் துன்பங்களைப் பார்த்தபடி உள்ளதால் உனக்கு என்னை விட, உனது தயை காரணமாக, மிகுந்த துக்கம் ஏற்படும். உனது வருத்தத்தை விலக்கிக் கொள்ளும் பொருட்டாவது எனது பாபங்களை நீ பொறுத்துக் கொள்வாயாக.

கடந்த ச்லோகத்தில் இவர் கூறியதைக் கேட்ட ஸ்ரீரங்கராஜன், “நீவிர் எத்தனை சமாதானம் உரைத்தாலும், நம்மால் தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் இருக்க இயலாது. ஆகவே உமது பாபங்களுக்கான தண்டனைகளை அனுபவித்தே தீரவேண்டும்”, என்றான். இதற்கு இவர் இந்த ச்லோகத்தை அருளிச்செய்தார்.