Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 7)

Sri Kshama Shodashi

ஸம்பூயாகில பாதகைர் பஹுவிதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம் ஸர்வம் ஸஹ்ய மிதம் மம த்வயி ஹரே ஜாக்ரத்யபி த்ராதரி துக்காக்ராந்த மவேஷ்ய மாம் இஹ ஜநோ துஷ்டாசயஸ் த்வத் குணாந் க்ஷாந்த்யாதீந் ப்ரதி துர்வசம் யதி வதேத் ஸோடும் ந தத் சக்யதே

ஸ்ரீரங்கநாதா! நான் பலவிதமான பாபங்களை அறிந்தே செய்தபடி உள்ளேன். இவைகள் அனைத்திற்கும் கிட்டவேண்டிய பலவிதமான தண்டனைகளை நீ எனக்கு அளிக்கலாம். ஆனால் எல்லையற்ற காலமாகப் பாபங்கள் செய்தும், அவற்றுக்கான பலன்களை அனுபவித்தபடியும் இருக்க நான் பழகிவிட்டதால், எனக்கு நீ அளிக்கும் எந்தவிதமான தண்டனையும் பொறுத்துக் கொள்ளும்படியாகவே இருக்கும். ஆனால் அந்தத் தண்டனைகள் காரணமாக நான் பலவிதமான துன்பங்கள் அடைவதைக் கண்ட துர்க்குணம் கொண்ட மனிதர்கள், ”என்ன இது! இந்த அரங்கன் இங்கு உள்ளபோதிலும் இவன் இத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறானே! அரங்கனின் பொறுமை என்பது உண்மையானால் இவனை மன்னித்திருக்கலாமே!”, என்று உனது க்ஷமை பற்றித் தவறாகக் கூறி தூற்றுவார்கள். எத்தனையோ துன்பங்களைப் பொறுக்க முடிந்த என்னால், இவர்கள் உன்னைப் பற்றி இவ்விதம் உரைப்பதை பொறுத்துக் கொள்ள இயலாது (ஆகவே என்னை நீ பொறுப்பாயாக).

தனக்கு எத்தனை தண்டனைகள் கிட்டினாலும் அதனைத் தன்னால் பொறுத்துக் கொள்ள இயலும். ஆனால் தன்னால் பொறுக்கமுடியாதது என்ன என்பதை இங்கு அருளிச்செய்கிறார்.