Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 4)
Sri Kshama Shodashi
புண்யம் பாபமிதி த்வயம் கலு தயோ: பூர்வேண யத் ஸாத்யதே தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் ரங்கேச ஸஞ்ஜாயதே பாச்சாத்யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித: ஸ்மாரகம் தேநாநேந க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் க்ஷம்யதாம்
ஸ்ரீரங்கநாதா! இந்த உலகில் புண்ணியம், பாவம் என்ற இரண்டும் உள்ளது. இவற்றில் புண்ணியபலன் அதிகமாகும்போது அதன் காரணமாக உன்னையே மறந்து விடக்கூடிய நிலை ஏற்படுகிறது. ஆனால் பாபங்களின் பயன் அதிகமாகும்போது துன்பம் அதிகமாகிறது; இதன் விளைவாக அந்தத் துன்பங்களை நீக்கக்கூடியவனாகிய உன்னைப் பற்றிய எண்ணமே எப்போதும் எனக்கு உள்ளது. ஆகவே நான் பாபங்கள் செய்தவன் என்பதை ஒப்புக்கொண்டு என்னைப் பொறுப்பாயாக.
புண்ணிய பலன் காரணமாக ஒருவனுக்கு நிரம்ப செல்வம், வீடு, மனைவி, மக்கள் என்று அனைத்து வசதிகளும் உண்டாகிவிடுகின்றன. இதன் காரணமாக அவன் இன்பமாக வாழ்கிறான். இதனால் ஸ்ரீரங்கநாதனின் நினைவே அவனுக்கு உண்டாகாது. ஆனால் பாவம் செய்தவர்கள் அதன் பலனை அனுபவிக்கும்போது உண்டாகும் துன்பம் காரணமாக எப்போதும் அவனை அழைத்தபடி இருப்பார்கள். இங்கு தனக்கு ஸ்ரீரங்கநாதனின் நினைவு எப்போதும் உள்ளதால், புண்ணியம் ஏதும் செய்யாமல் பாபங்களையே தான் செய்ததற்கு இதுவே சாட்சி என்று கூறி, அதன் காரணமாகத் தன்னைப் பொறுக்கவேண்டும் என்று வேடிக்கையாக உரைக்கிறார்.