Sri Kshama Shodashi - Sri Kshama Shodashi (ச்லோகம் 3)

Sri Kshama Shodashi

த்வத் க்ஷாந்தி: கலு ரங்கராஜ! மஹிதீ தஸ்யா: புநஸ்தோஷணே பர்யாப்தம் ந ஸமஸ்த சேதந க்ருதம் பாபம் ததோ மாமகம் லக்ஷ்யம் நேதி ந மோக்து மர்ஹஸி யத: குத்ராபி துல்யோ மயா நாந்யஸ் ஸித்யதி பாபக்ருத் தததுநா லப்தம் து நோபேக்ஷயதாம்

ஸ்ரீரங்கராஜா! பெரியபெருமாளே! இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் பாபங்களையும் ஒன்று சேர்த்தால் கூட உன்னுடைய க்ஷமை என்பதற்கு அவை உணவாக நின்று த்ருப்தி அளிக்கவாய்ப்பில்லை. இந்த நிலையில் எனது பாபங்களை ஏற்பதன் மூலம் உனது க்ஷமைக்கு என்ன த்ருப்தி உண்டாக்கப்போகிறது என்று எனது பாபங்களைத் துச்சமாக எண்ணி, எனது பாபங்களைத் தள்ளாதே! எனது பாபங்களுக்குச் சமமாக வேறு யாருடைய பாவமும் இருக்கமுடியாது. உனது க்ஷமை எத்தனை பெரியதோ, (அந்த க்ஷமையின் அளவிற்கே சவால் விடும்படி) அத்தனை பெரியது எனது பாவமும் ஆகும். எனவே எனது பாபங்களை நீ அலட்சியம் செய்யாதே (அதாவது தனது பாபங்களை அலட்சியம் செய்தால், தன்னைp பார்க்காமல் விட்டுவிடுவான் என அஞ்சுகிறார் என்று கருத்து)

“இவன் உண்மையை ஒப்புக்கொண்டான், நாம் பொறுத்துக்கொள்வோம்”, என்று அரங்கன் முடிவு செய்கிறான். அதன் பின்னரே நமது பாபங்களை அவன் காண்கிறான். உடனே, “கெட்டோம்! இத்தனை பாபங்கள் இவன் கணக்கில் உள்ளனவே! நமது க்ஷமை முழுவதையும் இவனுக்கே தாரை வார்த்துக் கொடுத்தால், மற்றவர்களுக்கு என்ன செய்வது”, என்று எண்ணக்கூடிய நிலையில் இந்த ச்லோகம் உள்ளது.