Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 57)

Sri Guna Ratna Kosam

ஔதார்ய காருணிகதாச்ரித வத்ஸலத்வ பூர்வேஷு ஸர்வமதிசாயித மத்ரமாத: ஸ்ரீரங்கதாம்நி யதுதாந்ய துதாஹரந்தி ஸீதாவதாரமுகமேதத் அமுஷ்ய யோக்யா

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்), மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா), அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்) ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே! நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்தபோதும் அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர். அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி, முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும். பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?