Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 56)

Sri Guna Ratna Kosam

ஜநநபவந ப்ரீத்யா துக்தார்ணவம் பஹுமந்யஸே ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம் உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண க்ஷமமிதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய். நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும், அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய். ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்! அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு, நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும்.

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும். ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.