Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 55)
Sri Guna Ratna Kosam
தசசத பாணி பாத வதந அக்ஷி முகைரகிலை: அபி நிஜ வைச்வரூப்ய விபவை ரநுரூப குணை: அவதரணை ரதைச்ச ரஸயந் கமிதா கமலே க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே
தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன, இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக்கல்யாண குணங்கள் என்ன? இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்தபோதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும் உனது காதல் என்னும் பெருவெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?
இவன் எத்தனை ஸ்வரூப ரூப குணங்கள் கொண்டவனாக இருந்தாலும், அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.