Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 54)
Sri Guna Ratna Kosam
அதிசயிதவாநப்திம் நாதோ மமந்த பபந்த தம் ஹர தநுரஸௌ வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜ ச மைதிலி அபி தச முகீம் லூத்வா ரக்ஷ: கபந்த மநர்த்தயத் கிமிவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:
தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும், உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்? உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான். உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான். அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான். ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான். பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.
இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான். திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான். இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?