Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 51)

Sri Guna Ratna Kosam

மாதர் லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேநாத்வநா தே வயம் த்வத் தாஸ்யைக ரஸாபிமாந ஸுபகை: பாவைரிஹாமுத்ர ச ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேம ச

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம். உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை, “உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம். அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம். இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் - என்றார். அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் - என்றார். இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி, அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.