Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 49)

Sri Guna Ratna Kosam

ஸ்கலித கடக மால்யை: தோர்பிரப்திம் முராரே: பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை ப்ரமதம்ருத தரங்கார்த்தத: ப்ராதுராஸீ: ஸ்மித நயந ஸுதாபி: ஸிஞ்சதீ சந்த்ரிகேவ

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்தபோது, அதிலிருந்து வெளிவந்த அமிர்தத்தைத் தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார். ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான். இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர். ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான். அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள். இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.