Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 48)

Sri Guna Ratna Kosam

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே: அநுஜநுரநுரூபா தேவி நாவாதரிஷ்ய: அஸரஸ மபவிஷ்யந் நர்ம நாதஸ்ய மாத: தர தளத் அரவிந்தோதந்த காந்தாய தாக்ஷி

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் - இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் - அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய். அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால், அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லையென்றால் இராமாவதாரம் சுவைக்காது. ருக்மிணி இல்லையென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது. வாமனனாக வந்தபோதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான். வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.