Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 47)
Sri Guna Ratna Kosam
ஸாமாந்ய போக்யமபி கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி ரமண: ஸ்வயமேவ பிப்ரத் தத் பார கேதமிவ தே பரிஹர்த்து காம: ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரி காஹதே த்வாம்
ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை, ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை) ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும். ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.
இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள். அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் - என்று கருத்து.