Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 46)
Sri Guna Ratna Kosam
கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை: வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா
ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில் பல ஆபரணங்கள் - தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி, நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் - என்று பல உள்ளன. அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும், கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.
இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார். இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க. இதனை இராமாயணத்தில் இராமன் - ந ஜீவேயம் க்ஷணம் - அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் - என்பதன் மூலம் உணரலாம்.