Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 45)

Sri Guna Ratna Kosam

மர்ம ஸ்ப்ருசோ ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை: காந்தோபபோக லலிதை: லுலிதாங்க யஷ்டி: புஷ்பாவளீவ ரஸிக ப்ரமரோப புக்தா த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய். இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய். இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

“புஷ்ப ஆவளி” என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும். இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது. இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க. தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான். இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.