Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 41)
Sri Guna Ratna Kosam
ஆநந்தாத்மபி ரீச மஜ்ஜந மத க்ஷீபாலஸை ராகல ப்ரேமார்த்ரைரபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவிதாஸ் மாத்ருசை: பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை: ஐச்வர்யோத்கம கத்கதை: அசரணம் மாம்பாலயாலோகிதை:
தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் - ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது; அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது; கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது; வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது; இவ்வாறு தோன்றிய நான்முகன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு, உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்; தடுமாறியபடிப் பெருகுவதாகும் - தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன். என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.
ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழவேண்டும், இன்னார் மீது விழக்கூடாது”, என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது. அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது. தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை; அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.