Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 40)
Sri Guna Ratna Kosam
த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா: நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ஸ்ரீ நிர்பராப்யாம் பதிம் த்ருக்ப்யாமேவஹி புண்டரீக நயநம் வேதோ விதாமாஸதே ஸாக்ஷாத் லக்ஷ்மி தவாவ லோக விபவ: காக்வா கயா வர்ணயதே?
ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர். அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது). உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன. இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும். இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?
நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன. இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன. ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.