Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 39)
Sri Guna Ratna Kosam
ஸுரபித நிகமாந்தம் வந்திஷீயேந்திராயா: தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப: ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே
ஸ்ரீரங்கநாயகீ! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய். உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது; அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது. இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன. தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).
ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.