Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 38)
Sri Guna Ratna Kosam
ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் சாகுஞ்ச்ய பாதாம்புஜம் மத்யே விஷ்டர புண்டரீகமபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம் த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ ஸ்பாராபாங்க தரங்கமம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய். மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய். உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய். இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய். உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் - கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன; இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.
இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார். என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?