Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 37)

Sri Guna Ratna Kosam

ப்ரணமதநு விதித்ஸா வாஸநா நம்ரமக்ரே ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந ப்ரவரமித முதாரம் வர்ஷ்ம வாசாமபூமி:

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது. உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது. உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது. இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும். இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய். இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.