Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 35)

Sri Guna Ratna Kosam

கந கநக த்யுதீ யுவதசாமபி முக்ததசாம் யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம் த்ருவமஸமாந தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ த்வயி ச குசேசயோதர விஹாரிணி நிர்விசஸி

தாமரைமலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது. உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது; உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான். உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன. அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் - ஹிரண்ய வர்ணாம் - என்று போற்றியது காண்க.