Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 34)
Sri Guna Ratna Kosam
யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந ஸ்திரத்வாதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந் த்வயி ஸ்த்ரீத்வைகாந்தாந் ம்ரதிம பதிபாரார்த்ய கருணா க்ஷமாதீந்வா போக்தும் பவதி யுவயோராத்மநி பிதா
ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன - மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது - இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் - இரக்கம் நிரம்பிய மனம், ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.
இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார். இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார். அவையாவன : நம்பெருமாள் * யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா) * அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி ஸ்ரீரங்கநாச்சியார் * நம்பெருமாளுக்கு வசப்படுதல் * விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)