Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 33)

Sri Guna Ratna Kosam

அந்யேபி யௌவநமுகா யுவயோ: ஸமாநா: ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி தஸ்மிந் தவ த்வயி ச தஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக்கல்யாணகுணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக்கல்யாணகுணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார். “உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!