Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 32)
Sri Guna Ratna Kosam
ப்ரசகந பல ஜ்யோதி: ஜ்ஞாநைச்வரீ விஜய ப்ரதா ப்ரணதவரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா: அபி பரிமள: காந்தி: லாவண்ய மர்ச்சிரிதீந்திரே தவ பகவத்ச்சைதே ஸாதாரணா குணராசய:
ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்; அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி - ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?
பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல், தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன், ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது, ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல், வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன், ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல், ப்ரணதவரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல், ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல், க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்