Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 31)

Sri Guna Ratna Kosam

ஸ்வத: ஸ்ரீஸ்த்வம் விஷ்ணோ: ஸ்வமஸி தத ஏவைஷ பகவாந் த்வதாயத்தர்த்தித்வேபி அபவதபராதீ ந விபவ: ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவதபி மஹார்கம் ந விகுணம் ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச நசாந்யாஹித குணம்

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய். இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான். ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது. ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு, இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே. ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார். இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார். அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு, “இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.