Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 30)

Sri Guna Ratna Kosam

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத் அமீயத்ர த்வித்ரா: ஸ ச சதமகாதி: தததராத் அத: ஸ்ரீராம்நாய: ததுபயமுசம் ஸ்த்வாம் ப்ரணிஜகௌ ப்ரசஸ்திஸ் ஸாராஜ்ஞ: யதபி ச புரீகோச கதநம்

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப்பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தைக் காட்டிலும் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம். அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற பல தன்மைகள் நித்யமாக உள்ளன. இராமன் - ந ஜீவேயம் க்ஷணம் அபி - சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது - என்றான் அல்லவா? இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர். ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.