Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 28)

Sri Guna Ratna Kosam

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ரவதநே த்வதாச்லேஷோகர்ஷாத் பவதிகலு நிஷ்கர்ஷஸமயே த்வமாஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ: ததந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத அபிதத்தே ச்ருதிரபி

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார். அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள். இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான் ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் - பிரித்து நிலையில்லை (46) என்றும், ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார். இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் - இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் - என்றார்.