Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 27)
Sri Guna Ratna Kosam
தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை: போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா: ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசாரவ்ருத்யை ஸதாபி ப்ரேம ப்ரத்ராண பாவாவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:
அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்யசூரிகள், உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்; தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்; அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்; என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்; உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் - இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.
கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல். செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்யசூரிகளும் கர்மவசப்படாமல் இருத்தல்.