Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 24)
Sri Guna Ratna Kosam
தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரமார்ஹாவகாசம் ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பிராநந்த நிக்நை: ஸ்நேஹாதஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ராஸி முக்யை: ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹுராஸ்தாந ரத்நம்
தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில், உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது. அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது. உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது. உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில், சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன. இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும் உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.