Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 23)
Sri Guna Ratna Kosam
ஆஜ்ஞாநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம் யாயோத்யேயபராஜிதேதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா பாவைரத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி: ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:
ஸ்ரீரங்கநாதனுடைய பெரியகோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகீ! நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும் பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலைநகரமாகக் கொண்டுள்ளீர்கள். (அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள், அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்). அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் - ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது. அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும், உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர். அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது. இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.