Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 21)

Sri Guna Ratna Kosam

யத்தூரே மநஸ: யதேவ தமஸ: பாரே யதத்யத்புதம் யத் காலாத் அபசேலிமம் ஸுரபுரீ யத் கச்சதோ துர்கதி: ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம் தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது; அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது; அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது; அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு, உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்; அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்; அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது; அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது - இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்தச் ச்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார். இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.