Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 18)

Sri Guna Ratna Kosam

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சநாகிஞ்சனை: அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லவ ப்ரக்ரியம் இதம் ஸத ஸதாத்மநா நிகிலமேவ நிம்நோந்நதம் கடாக்ஷ ததுபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் - அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள், மிக உயர்ந்த ப்ரம்மன் - எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன், பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன? இது இவ்வாறு இருப்பது - உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ? இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?