Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 14)

Sri Guna Ratna Kosam

உத்பாஹுஸ்த்வாம் உபநிஷத் அஸாவாஹ நைகா நியந்த்ரீம் ஸ்ரீமத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே ஸ்மர்த்தாரோஸ்மஜ் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை: நிந்யு: வேதாநபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்

எங்கள் எல்லோருடைய பிறப்பிற்கும் காரணமாக உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும் தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை. ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது. இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட - புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான். இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும். இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்? இதனை வால்மீகி முனிவரே - ஸீதாயாச் சரிதம் மஹத் - ஸீதையின் சரிதமே இதில் முதன்மையானது - என்று கூறியதைக் காண்க.