Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 8)
Sri Guna Ratna Kosam
அநாக்ராதாவத்யம் பஹுகுண பரீணாஹி மநஸ: துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம மிவாதாபி கஹநம் பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ச்ரவணயோ: த்வமேவ ஸ்ரீ: மஹ்யம் பஹுமுகய வாணீவிலஸிதம்
மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை, பல வழிகளில் நீ அளிக்கவேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்கவேண்டும் என்றால் - குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது; பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்படவேண்டும்; அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்; இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.
சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார். இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க. ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார். ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் - பாரதீ பகவதீ து யதீயதாஸி - என்றார்.