Sri Guna Ratna Kosam - Sri Guna Ratna Kosam (ச்லோகம் 1)
Sri Guna Ratna Kosam
ச்ரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே: அங்கீகாரிபிராலோகை: ஸார்த்தயந்த்யை க்ருதோஞ்ஜலி:
ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான். அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான். இதனால் அவனுக்கு ஒருவிதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்). இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் - எப்படி? அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்தயந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன). இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல. பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது). இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்! பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும், மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).