Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 999)

Paththati 32 - பல பத்ததி

கதம் காரம் லக்ஷ்மீ கரகமல யோக்யம் நிஜபதம் நிதத்யாத் ரங்கேச: குலிசகடிநே அஸ்மிந் மநஸி ந: ந சேதேவம் மத்யே விசதி தயயா தேவி பவதீ நிஜாக்ராந்தி க்ஷுண்ண ஸ்மரசரசிகா கண்டக ததி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! எங்களது மனம் என்பது மன்மதனின் ஆக்கிரமிப்பு காரணமாக அவன் பாணங்கள் நிறைந்ததாக, கூர்மையான முள் வரிசைகள் கொண்டதாக உள்ளது. உன்னுடைய தயை காரணமாக எனது மனம் மற்றும் ஸ்ரீரங்கநாதன் திருவடிகள் ஆகிய இரண்டிற்கும் இடையில் புகுந்து கொள்கிறாய். இப்படி நீ செய்யவில்லை என்றால் – ஸ்ரீரங்கநாச்சியாரின் தாமரை போன்ற திருக்கரங்களால் மட்டும் வருடக்கூடிய மென்மையான தனது திருவடிகளை ஸ்ரீரங்கநாதன், வஜ்ராயுதம் போன்ற கடினமான எங்கள் மனதில் எப்படி வைப்பான்?