Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 998)

Paththati 32 - பல பத்ததி

த்வயி ஆயத்தௌ பகவதி சிலாபஸ்மநோ: ப்ராணதாநாத் ஆஸ்த்ரீபாலம் ப்ரதித விபவௌ பாத பத்மௌ முராரே: தாமேவ அஹம் சிரஸி நிஹிதாம் அத்ய பச்யாமி தைவாத் ஆத்மாதாரம் ஜநநி பவதீம் ஆத்மலாப ப்ரஸூதிம்

அனைத்து திருக்கல்யாண குணங்களும் நிறைந்த பாதுகையே! இந்த உலகின் தாயே! அகலிகை என்ற கல்லுக்கும், சாம்பலாகக் கிடந்த பரீக்ஷத் என்ற சிசுவுக்கும் உயிர் அளித்த காரணத்தினால் பெண் - குழந்தை வரையில் ப்ரஸித்தம் பெற்றதாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகள், உனக்கு வசப்பட்டவையாகவே உள்ளன. அனைத்து உலகங்களுக்கு ஆத்மாவாக உள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு நீயே ஆதாரபூதையாக உள்ளாய். உன்னைத் தாங்குபவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும் மேம்பட்டவளாக விளங்குகிறாய். இவ்விதம் உள்ள நீ, எங்கள் ஸ்வரூபத்தை நாங்கள் அறிவதற்குக் காரணமாக உள்ளாய். எனது புண்ணியம் காரணமாக இப்படி நீ எனது தலையில் உள்ளதைக் காண்கிறேன்.