Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 997)
Paththati 32 - பல பத்ததி
அஜநிஷி சிரம் ஆதௌ ஹந்த தேஹ இந்த்ரியாதி: ததநு தததிகஸ்ஸந் ஈச்வர: அஹம் பபூவ அத பகவத ஏவாபூவம் அர்த்தாத் இதாநீம் தவ புந: அஹம் ஆஸம் பாதுகே தந்ய ஜந்மா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எல்லையற்ற காலமாக நான் எனது உடல் மற்றும் இந்த்ரியங்கள் ஆகியவற்றையே எனது ஸ்வரூபமாக எண்ணி இருந்தேன். அதன் பின்னர், கர்மகாண்டங்களைச் சற்றே அறிந்த பின்னர், உடல் போன்றவற்றைக் காட்டிலும் நான் மாறுபட்டவன் என்று உணர்ந்தும், ஈச்வரன் நானே என்று எண்ணியபடி இருந்தேன். அதன் பின்னர் ஸ்ரீரங்கநாதன் என்னிடம் எதனையும் எதிர்பார்க்காமல் என்னைக் கடாக்ஷித்தபோது, அவனுக்கே உடமையாக நின்றேன். ஆனால் இப்போது பாகவத அடிமைத்தனத்தின் எல்லையை அடைந்து, உனக்கே அடிமையாக நின்று, சிறந்த பிறவிப்பயனை அடைந்தேன்.