Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 996)
Paththati 32 - பல பத்ததி
திலகயஸி சிரோ மே சௌரிபாதாவநி த்வம் பஜஸி மநஸி நித்யம் பூமிகாம் பாவநாக்யாம் வசஸி ச விபவை: ஸ்வை: வ்யக்திம் இத்தம் ப்ரயாதா தத் இஹ பரிணதம் மே தாத்ருசம் பாகதேயம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது தலையை நீ எப்போதும் அலங்கரித்தபடி உள்ளாய். எனது மனதில் எப்போதும் நினைவு ரூபமான உருவத்தில் நீ அமர்ந்துள்ளாய். என்னுடைய வாக்கிலும் உன்னுடைய தோற்றம் வெளிப்படும்படியாகவே உள்ளாய். இப்படிப்பட்ட பரிபூர்ணமான புண்ணியம் எனக்குக் கிட்டியது.