Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 995)
Paththati 32 - பல பத்ததி
பஹுவித புருஷார்த்த க்ராம ஸீமாந்தரேகாம் ஹரிசரண ஸரோஜ ந்யாஸ தந்யாம் அநந்ய: பரத ஸமய ஸித்தாம் பாதுகே பாவயம் ஸ்த்வாம் சதம் இஹ சரத: தே ச்ராவயேயம் ஸம்ருத்திம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்துவிதமான புருஷார்த்தங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவளாகவும், அந்தப் புருஷார்த்தங்களின் எல்லையாகவும் நீ உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற மென்மையான திருவடி வைப்பின் மூலம் மேன்மையுடன் உள்ளாய். ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும் மேன்மையானவள் என்று பரத ஸித்தாந்தம் மூலம் உணர்த்தப்பட்டாய். இப்படிபட்ட உன்னைத் தவிர வேறு எதனையும் நான் அண்டாமல், இந்த ஸ்ரீரங்கத்தில் நூறு வருடம் வாழ்ந்து, உன்னைப் புகழ்ந்தபடி இருப்பேனாக.