Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 994)

Paththati 32 - பல பத்ததி

புந: உதரநிவாஸ ச்சேதநம் ஸஹ்யஸிந்தோ: புளிநம் அதிவஸேயம் புண்யம் ஆப்ரஹ்மலாபாத் பரிணமதி சரீரே பாதுகே யத்ர பும்ஸாம் த்வம் அஸி நிகமகீதா சாச்வதம் மௌளிரத்நம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனக்கு பரப்ரஹ்ம ப்ராப்தி கிட்டும் வரையில், மறு பிறவியை அழிக்கவல்லதான, தூய்மையான காவேரியின் திட்டான, ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்து வருவேனாக. இந்த மணலில் ஒருவனது சரீரம் சாயும்போது, அவர்களது தலையில் விளங்கும் ஆபரணம் போன்று, வேதங்களால் துதிக்கப்படும் நீ அமர்கிறாய்.