Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 993)

Paththati 32 - பல பத்ததி

சரம நிகமகீதே ஸப்ததந்தௌ ஸமாப்தே நிஜ ஸதந ஸமீபே ப்ராபயிஷ்யந் விஹாரம் ஜ்வலநமிக பவத்யோ: ஸம்யக் ஆரோபயேந் மாம் ப்ரதம வரணவச்ய: பாதுகே ரங்கநாத:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! “எனக்கு நீயே கதி”, என்று ஒருமுறை கூறினாலே அந்தச் சரணாகதிக்கு வசப்பட்டு ஸ்ரீரங்கநாதன் நிற்கிறான். உபநிஷத்துக்களில் கூறப்பட்ட வேள்வி முடிந்தவுடன், அந்த அரணிக்கட்டைகள் அனைத்தையும் ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள அக்னி ஸ்தானத்திற்குக் கொண்டு வருவார்கள். இது போன்று எனது ஜீவன் என்ற யாகம் முடியும்போது என்னைத் தனது மாளிகையின் அருகில் கொண்டு செல்லும் பொருட்டு ஸ்ரீரங்கநாதன் செய்வது என்னவென்றால் – என்னை அக்னியைப் போன்று உங்கள் இருவர் மீதும் ஏற்றிக் கொள்ளப்போகிறான்.