Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 992)
Paththati 32 - பல பத்ததி
துரிதம் அபநயந்தீ தூரத: பாதுகே த்வம் தநுஜ மதந லீலா தேவதாம் ஆநயந்தீ அநிதர சரணாநாம் அக்ரிமஸ்ய அஸ்ய ஜந்தோ: அவச கரணவ்ருத்தே: அக்ரத: ஸந்நிதேயா:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனையும் உன்னையும் தவிர வேறு எந்தவிதமான கதியும் இல்லாதவர்களில் முதன்மையானவனாக நான் உள்ளேன்; எனது இந்த்ரியங்கள் எதுவும் என் வசம் இல்லை (அந்திம காலத்தில் உள்ள நிலை); இப்படியாக உள்ள பிராணி போன்ற எனது பாவங்கள் அனைத்தையும் நீ வெகு தூரம் விரட்டுவாயாக. அத்துடன் நில்லாமல், அசுரர்களை வதம் செய்வதைத் தனது லீலையாகக் கொண்ட ஸ்ரீரங்கநாதனை என்னிடம் எழுந்தருளப் பண்ணுவாயாக.