Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 991)
Paththati 32 - பல பத்ததி
ஹரிசரண ஸரோஜ பக்தி பாஜாம் ஜநாநாம் அநுகரண விசேஷை: ஆத்மநைவ உபஹாஸ்யம் பரிணமய தயார்த்ரா பாதுகே தாத்ருசம் மாம் பரத பரிஷத் அந்த: வர்த்திபி: ப்ரேக்ஷணீயம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரை மலர் போன்ற திருவடிகள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் மிகுந்த பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். நான் அவர்கள் போன்று பக்தி உள்ளவனாக நடித்தபடி உள்ளேன். இதனால் என்னை நானே பரிஹாஸம் செய்து கொள்ளும்படி உள்ளேன். இப்படிப்பட்ட என் மீது நீ இளகிய மனதுடன் அருள் சுரக்கவேண்டும். இதனால் நான் அவர்கள் போன்று பக்தி கொண்டவனாகவும், பரதனின் கோஷ்டியைச் சேர்ந்த “பாதுகா சேவகர்கள்” மூலம் கடாக்ஷிக்கப்பட்டவனாகவும் ஆகும்படி நீ செய்யவேண்டும்.